உள்ளூர் செய்திகள்

திட்டப்பணிகளை மேயர் தினேஷ் குமார் ஆய்வு செய்த காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் உள்ளார். 

மாநகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு

Published On 2022-07-05 11:12 GMT   |   Update On 2022-07-05 11:24 GMT
  • திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் ரோடு பணி நடைபெற்று வருகிறது.
  • ரோடு போடும் பணியை துரிதப்படுத்தி பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

திருப்பூர் :

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் அணைப்பாளையம் முதல் மணிய காரபாளையம் வரை ரோடு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளிடம் ரோடு போடும் பணியை துரிதப்படுத்தவும், தனியார் சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு கொடுத்து அதனை சரி செய்து பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி மாட்டு கொட்டகையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மைப் பணி வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் காந்தி குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News