உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டும்பணிக்கு பூமி பூஜை நடந்த போது எடுத்த படம்.

வெள்ளகோவிலில் ரூ. 91 லட்சத்தில் திட்டப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-05 05:11 GMT   |   Update On 2022-07-05 05:11 GMT
  • வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
  • ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு அமைச்சர் வழங்கினார்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஒன்றியம் பகுதியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரூ. 91 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும் வெள்ளகோவில் அருகே உள்ள வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் கள்ளமடை என்ற இடத்தில் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

வெள்ளகோவில் ஆர்.பி.எஸ். மஹாலில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகக் கடைகளை பார்வையிட்டு ஒரு சில புத்தகங்களை வாங்கினார்.வெள்ளகோவிலில் ரூ.40 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன். திமுக. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், துணைச் செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன். வேலப்பநாயக்கன்வலசு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், கால்நடை மருத்துவ இணை இயக்குனர் பாரிவேந்தன், மருத்துவர்கள் பிரகாசம், பகலவன் உட்பட தி.மு.க. பிரமுகர்கள், கால்நடை துறை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News