உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் பகுதியில் நடைபெற்ற முகாமில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை படத்தில் காணலாம். 

வெள்ளகோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-07-11 04:33 GMT   |   Update On 2022-07-11 04:33 GMT
  • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் மொத்தம் 128 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
  • வெள்ளகோவிலில் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 128 இடங்களில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, 2ம் தவணை கொரோனா தடுப்பு ஊசியும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று முன்தினம் வரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 6 ஆயிரத்து266 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 5 ஆயிரத்து 41 நபர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 75 ஆயிரத்து 166 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 64 ஆயிரத்து 319 நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி 1 ஆயிரத்து 209 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags:    

Similar News