உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-04 08:00 GMT   |   Update On 2022-09-04 08:00 GMT
  • ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இந்நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள் விளக்கினர்.

குடிமங்கலம் :

குடிமங்கலத்தில் உள்ள பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை திருப்பூர் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

இந்நிறுவனத்தின் தலைவர் பரமசிவம், இயக்குனர்கள் முத்துச்சாமி, செல்வக்குமார், கீர்த்திகா ஆகியோர் விளக்கினர்.கூட்டுப்பண்ணைய நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு வேளாண் துறை சார்ந்த, அரசு திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களில் முன்னுரிமை வழங்கவும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை இந்நிறுவனம் வாயிலாக செயல்படுத்தி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News