உள்ளூர் செய்திகள்

விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த காட்சி.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-10-03 11:27 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
  • பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்கள் மீது தண்ணியை ஊற்றி காப்பாற்றினார்.

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் ஒரு தம்பதி திடீரென உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். தொடர்ந்து அங்க பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்கள் மீது தண்ணியை ஊற்றி காப்பாற்றினார். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் தீக்குளிக்க முயன்றது கூனம்பட்டியை சேர்ந்த சம்பத் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து கலெக்டரிடம், சம்பத் கொடுத்த மனுவில் கூறியதாவது:- கௌதம் பாளையம் கிராமத்தில் எனக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. எனது விவசாய பூமிக்கு தென்புறமாகவும் மேற்குரத்தில் ஒரு பகுதியில் நல்லசாமி என்பவருக்கு விவசாய பூமி உள்ளது. நல்ல சாமி குடும்பத்தினர் அடிக்கடி எனது பூமிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து வருகின்றனர். இதன் காரணமாக எனது விவசாய நிலத்தில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளேன். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி எனது பூமியில் உள்ள 2 லட்சம் மதிப்புள்ள கல்லுக்கால்கள் மற்றும் கம்பி வேலியினை உடைத்து நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நான் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது சொத்துக்கும் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே நல்லசாமி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News