உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடியில் உத்தரபிரதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 09:06 GMT   |   Update On 2022-06-19 09:06 GMT
  • அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு
  • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி:

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் உத்தரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தில் ஜாவித் அஹமத், ஆப்ரீன் பாத்திமா மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்தும், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களின் வீட்டை இடித்து அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் எம்.முஹம்மத் ஐயூப் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் வி.அதீகுர் ரஹமான், மாவட்ட தலைவர் டி.முஹம்மத் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஷி அக்ரம் வரவேற்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சையத் அஹமத் ஹுசைனி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.டி. நிசார், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முல்லை, வெல்பர் பார்ட்டி யின் பல்வேறு நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News