என் மலர்
நீங்கள் தேடியது "shooting"
- குடும்ப பிரச்சினை காரணமாக மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
- இந்த தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செடின்ஜி:
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார். தெருவில் நடந்து சென்றவர்கள், கண்ணில் பட்டவர்கள் என அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அமலில் உள்ளன.
- ஆனாலும் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் 3 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு பாய்ந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தேடிவருகின்றனர். விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
உலகிலேயே கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருந்தும் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- கடந்த திங்கட்கிழமை போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
- இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
கின்ஷாசா:
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தொடர் வன்முறைக்கு மக்கள் இலக்காகி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாக்க ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழு தவறிவிட்டது எனக்கூறி பெரும் போராட்டம் வெடித்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், கிழக்கு காங்கோ எல்லை பகுதியில் விடுமுறைக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழுவை சேர்ந்த ராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
கசிந்தி என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வீரர்கள் கைது செய்யப்பட்டு, எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கோவில் உள்ள ஐ.நா.வுக்கான பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதி பின்டவ் கெய்டா கூறியுள்ளார்
வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- மணிலா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணைக் கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இல்லினாய்ஸ் நகரில் சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இந்த தாக்குதலில் 19 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிபர் பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கொள்கையையும் வகுத்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.
இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது.
- அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெறுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் நடப்பு ஆண்டில் மட்டும் 8 சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் போலியோ தடுப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியது. இதன்படி, வீடு வீடாக போலியோ தடுப்பு மருந்து போட குழு அமைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு கைபர் - பக்துன்க்வா மாகாண முதல் மந்திரி மெகமூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
- துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதனை பலர் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாக சுட்டான். இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் உத்தரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தில் ஜாவித் அஹமத், ஆப்ரீன் பாத்திமா மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்தும், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களின் வீட்டை இடித்து அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் எம்.முஹம்மத் ஐயூப் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் வி.அதீகுர் ரஹமான், மாவட்ட தலைவர் டி.முஹம்மத் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஷி அக்ரம் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சையத் அஹமத் ஹுசைனி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.டி. நிசார், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முல்லை, வெல்பர் பார்ட்டி யின் பல்வேறு நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 78 வயதான முதியவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.
இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #Canada #Church #Shooting