உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

பரமத்தி வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-08-05 09:11 GMT   |   Update On 2022-08-05 09:11 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தண்டனை காலத்திற்குரிய நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமத்தி வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தில் நேற்று இரவு ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பரமத்தி ஒன்றியம் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியரின் கட்டாய இடமாறுதல், தண்டனை காலத்திற்குரிய நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு நிலை ஆணைகள் பெற்று வழங்கி ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு நிலுவை ஊதியத்தை உடனே ஆசிரியர்களுக்கு பெற்று வழங்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள கந்தம்பாளையம், பிராந்தகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்துள்ள போராட்ட கால சலுகைகளை முறைப்படுத்தி அரசின் விதிமுறைகளின் படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் அலுவலகத்தில் இருந்த வட்டார கல்வி அலுவலர் கவுரியை சிறைப்பிடித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்தது அங்கு வந்த பரமத்தி ஆய்வாளர் ரமேஷ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இரவு நடந்த இந்த ் முற்றுகைப் போராட்டத்தால் வட்டார கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News