உள்ளூர் செய்திகள்

ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாளை 1,500 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்

Published On 2022-07-01 07:27 GMT   |   Update On 2022-07-01 07:27 GMT
  • காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.
  • ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர்.

சென்னை:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை ஆதம்பாக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,500 பேருக்கு அவர் பொற்கிழி வழங்குகிறார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரான குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாளை மாலை 6 மணியளவில் ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜெ.கார்டனில் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, 1500 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார்.

தி.மு.க. பொருளாளர், டி.ஆர்.பாலு எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மேயர் வசந்த குமாரி, துணை மேயர் காமராஜ், ஒன்றிய, நகர செயலாளர்கள் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நகராட்சி-ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், நகராட்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஆலந்தூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

விழா தொடக்கத்தில் இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் இளைஞர்களின் இதயம் கவர்ந்த இளந்தலைவர் பங்கேற்க உள்ள இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஒட்டுமொத்த கழகத்தினரும் அலைகடலென அணி திரண்டு வரவேண்டும்.

மேலும், அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களிலிருந்து பொற்கிழி பெறும் கழக மூத்த முன்னோடிகள் மாலை 4 மணிக்கெல்லாம் அவர்களது இருக்கையில் அமர வேண்டும்.

இவ்வாறு அதில் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

Tags:    

Similar News