உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது- சபாநாயகர் அப்பாவு

Published On 2022-07-14 08:01 GMT   |   Update On 2022-07-14 10:27 GMT
  • அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன்.
  • அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சென்னை:

சென்னையில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகி உள்ளார்? பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருப்பதால் இதுபற்றி ஏதும் கடிதம் கொடுத்திருக்கிறார்களா?

பதில்:-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அவரது உதவியாளர் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் மீது விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த முடிவு எடுத்தாலும் அதை தெரிவிப்பேன்.

மற்றபடி அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் சென்றுள்ளனர். அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.

எனவே எல்லாமே பரிசீலனையில்தான் உள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நீங்களாக யூகித்து கொண்டு பதிலை எதிர்பார்த்தால் அதுபற்றி கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News