தமிழ்நாடு செய்திகள்

கரூரில் இருந்து தென்கொரியாவுக்கு அம்புவிட்ட காதல்- கை கூடிய திருமணம்

Published On 2024-05-19 14:38 IST   |   Update On 2024-05-19 14:53:00 IST
  • கரூர் மாவட்டத்தில் ஒரு பெண் சமூகவலைதளத்தில் தென்கொரியாவை சேர்ந்து வாலிபருடன் நட்பாக பழகியுள்ளார்.
  • காதல் மலர்ந்து வானத்தில் பறந்து வந்த மாப்பிளை கரூர் சென்று பெண் வீட்டாரிடம் பெண் கேட்டார்.

ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வை தான் காதல் என்பார்கள். பார்த்தவுடன் காதல், பேசிப் பழகி ஏற்படும் காதல், கடிதம் மூலம் காதல் என வகை கூறலாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளம் மூலமே காதல் ஏற்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல், பெற்றோரின் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தேறியுள்ளது.

அதுபோல தான் கரூர் மாவட்டத்தில் ஒரு பெண் சமூக வலைதளத்தில் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் நட்பாக பழகியுள்ளார். அது சில நாட்கள் செல்ல செல்ல காதலாக மலர்ந்தது.

அந்த காதல் மலர்ந்து வானத்தில் பறந்து வந்த மாப்பிளை கரூர் சென்று பெண் வீட்டாரிடம் பெண் கேட்டார்.

திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதம் சொன்னதால், தென் கொரியாவை சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்பவரை கரூரை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் கரூர் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த இளைஞர் கரூரை சேர்ந்த பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.

Tags:    

Similar News