உள்ளூர் செய்திகள்

உச்சிமகாளி அம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.


களக்காடு அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2022-07-28 10:24 GMT   |   Update On 2022-07-28 10:24 GMT
  • திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள இசக்கிஅம்மன் கோவிலிலும் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
  • மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலரதவீதியில் ஸ்ரீஉச்சிமகாளி அம்மன் கோவில் உள்ளது.

நேற்று இரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை அங்கு சென்ற நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பிச்சையா என்ற திருநாமம் (வயது 56) திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர்கள் 2 பேர் காரில் வந்து இறங்கி, கோவிலுக்குள் சென்று உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபோல திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள இசக்கிஅம்மன் கோவிலிலும் இதே நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News