உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்ற காட்சி. 

தென்காசியில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி

Published On 2022-07-07 09:05 GMT   |   Update On 2022-07-07 09:05 GMT
  • நெடுஞ்சாலை துறையின் தென்காசி கோட்ட பொறியாளர் ராஜசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுரைகளை கோட்ட பொறியாளர் வழங்கினார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் இந்தப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து, சிறப்பு பணியாளர்களை பணியமர்த்தி போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி- பண்பொழி- திருமலைக்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையின் தென்காசி கோட்ட பொறியாளர் ராஜசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வாகன கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்து அது குறித்த தகவலை கேட்டு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுரைகளை கோட்ட பொறியாளர் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர் காசி பாண்டி உள்ளிட்டோர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News