உள்ளூர் செய்திகள்

சூரசம்கார மேடை விநாயகர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் - கோவில் இணை ஆணையரிடம் நுகர்வோர் பேரவை கோரிக்கை

Published On 2023-11-13 08:04 GMT   |   Update On 2023-11-13 08:04 GMT
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார மேடை அருகே உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது
  • கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த விநாயகருக்கும் தீபாராதனை நடைபெறும். எனவே விரைந்து கோவிலை புதுப்பிக்க வேண்டும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார மேடை அருகே உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த விநாயகருக்கும் தீபாராதனை நடைபெறும். எனவே விரைந்து கோவிலை புதுப்பிக்க வேண்டும்.

மேலும், கோவில் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் வராததால் பஸ்சுக்கு பக்தர்கள் பகத்சிங் பஸ் நிலையம் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் பகத்சிங் பஸ் நிலையத்திற்கு சர்குலர் பஸ் விட வேண்டும். கடற்கரை வளாகத்தில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தற்காலிக பெண்கள் உடை மாற்றும் இடம் அமைக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News