உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மூதாட்டியிடம் பணத்தை ஒப்படைத்த காட்சி.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டி தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை மீட்டு ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2022-06-25 10:28 GMT   |   Update On 2022-06-25 10:28 GMT
  • மூதாட்டி ஒருவர் தவறவிட்ட பணத்தை தேடி அலைவதை அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முத்துலட்சுமியை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
  • பணத்தை பெற்றுக்கொண்ட முத்துலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சமீபத்தில் நெல்லை அரசு மருத்துவமனையில் குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ரூ.5 ஆயிரம்

இதற்காக அவரை கவனிப்பதற்காக அவரது தாயார் முத்துலட்சுமி உடனிருந்து அவரை கவனித்து வந்துள்ளார். அவர் தனது செலவுக்காக வைத்திருந்த ரூ.5000-த்தை மருத்துவமனை வளாகத்தில் தவறவிட்டுள்ளார்.

அதேசமயம் மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த ஐகிரவுண்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு கிடந்த ரூ.5 ஆயிரம் பணம் கீழே கிடந்ததை பார்த்து அதை எடுத்தார்.

இதற்கிடையே மூதாட்டி ஒருவர் தவறவிட்ட பணத்தை தேடி அலைவதை அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முத்துலட்சுமியை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட முத்துலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டரை டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News