உள்ளூர் செய்திகள்

தேங்கி கிடக்கும் குப்பைகள்.

பள்ளி அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் மாணவர்கள் அவதி

Published On 2022-07-11 10:10 GMT   |   Update On 2022-07-11 10:10 GMT
  • தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
  • இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை விளார் புறவழிச்சாலை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை உள்ளது. 1350 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழிய ர்கள் என 300 பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளி அருகே சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. அதில் இருந்து புழு, கொசுக்கள் உற்பத்தி ஆவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் குப்பைகளை நாய்கள் அங்கும் இங்குமாக பரப்பிவிட்டு செல்கிறது. இதனால் பள்ளி முன்பு குப்பை கூடங்களாக காட்சியளிக்கிறது.

இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். குப்பை கள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும், தேங்கி உ ள்ளவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாணவ- மாணவிகள் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News