உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் பகுதியில் தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய மினி பஸ் பறிமுதல்

Published On 2022-12-21 10:26 GMT   |   Update On 2022-12-21 10:26 GMT
  • பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பி.மேட்டூர், வீரணம்பாளையம், கபிலர்மலை, மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ்கள் சென்று வருகிறது.
  • இந்த மினி பஸ்கள், அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்க–ளில் செல்லாமல் பர்மிட் இல்லாததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பி.மேட்டூர், வீரணம்பாளையம், கபிலர்மலை, மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ்கள் சென்று வருகிறது. இந்த மினி பஸ்கள், அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்க–ளில் செல்லாமல் பர்மிட் இல்லாத மாற்று வழித்தடங்க–ளில் இயக்கப்படுவதாக பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் பொது மக்கள் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் பரமத்தி வேலூர் பள்ளி சாலையில், அவ்வழியாக வந்த மினி பஸ்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதில், அனுமதி வழங்கப்–பட்ட வழித்தடங்களில் இயங்காமல் மாற்று வழித்தடங்களில் இயக்கிய 2 மினி பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய மற்றொரு மினி பஸ்சை பறிமுதல் செய்தனர்.

மேலும் அனைத்து மினி பஸ்களும் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்களிலேயே இயங்க வேண்டும் எனவும், விதியை மீறி மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. உரிய காலத்தில் மினி பஸ் உரிமையாளர்கள் இன்சுரன்ஸ் மற்றும் தகுதி சான்று ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News