உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி சென்ற போது எடுத்த படம்.


கடையநல்லூரில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-12 08:44 GMT   |   Update On 2022-08-12 08:44 GMT
  • கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்
  • கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவி மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜா புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் ஆகியோரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்களதுரை ஆகியோர் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசியர் ராஜன்,மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜன் கலந்துகொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இதுபோன்று கடையநல்லூர் பேட்டை பகுதி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேட்டை முழுவதும் பேரணியாக சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News