உள்ளூர் செய்திகள்

கோவையில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-07-04 09:51 GMT   |   Update On 2022-07-04 09:51 GMT
  • கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
  • கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது.

கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ. 750 வழங்க கோரி, சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஊராட்சியில் 8 மணி நேரம் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325் மட்டும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவை சுண்டப்பா ளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

கோவை மாவட்டம் சுண்டப்பாளையம் ரோட்டில் மசுரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் தினசரி, வார மற்றும் மாதம் அமாவசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கோவிலை அகற்ற போவதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். எனவே கோவிலை அகற்றாமல் வழிபாடு மேற்கொள்ள நிரந்தர தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News