உள்ளூர் செய்திகள்

என்.ஜி.ஓ. காலனியில் எரிவாயு தகனமேடை அமைத்து தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை மனு

Published On 2022-07-12 09:51 GMT   |   Update On 2022-07-12 09:51 GMT
  • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டுக்குட்பட்ட திருநகர் மக்கள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், திருநகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவில் மின்சார கேபிள் கட் ஆகி உள்ளது.

இதனால் அங்கு மின்கம்பங்களில் விளக்கு எரியவில்லை. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறி யிருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

51-வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி அளித்த மனுவில், மகிழ்ச்சி நகர் பகுதியில் மழை நீர் வடிகால் சேதமடைந்துள்ளது.அவற்றை சீரமைத்து தர வேண்டும். பொறியியல் கல்லூரி குடியிருப்பு பகுதியில் சேதம் அடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். ஜெயில் சிங்க் நகரில் உள்ள ஓடையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நமது நெல்லை இயக்கத்தினர் அளித்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம் என்.ஜி.ஓ.பி. காலனியில் எரிவாயு தகன மேடை அமைத்து தரவும், தகன மேடைக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News