உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் சாரல் மழை கடும் குளிரால் மக்கள் அவதி

Published On 2022-08-06 09:58 GMT   |   Update On 2022-08-06 09:58 GMT
  • ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வரகிறது.
  • பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம், ஆக:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

சாரல் மழை

குறிப்பாக ஏற்காடு, ஆனைமடுவு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது . மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வரகிறது. பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினமான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் 4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . கரியகோவில் 2, சங்ககிரி, ஆத்தூர் 1, கெங்கவல்லி 1 மி.மீ. சேலம், 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.01 மி.மீ. மழை பெய்துள்ளது. 

Tags:    

Similar News