உள்ளூர் செய்திகள்

கயத்தாறு வட்டார விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி

Published On 2023-07-16 08:56 GMT   |   Update On 2023-07-16 08:56 GMT
  • வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் அழகுகண்ணன் உட்பட பலர் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
  • பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் அங்கக பண்ணைகள் குறித்து தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது.

கயத்தாறு:

கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் ஆத்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கயத்தாறு வட்டார விவசாயிகள் 40 பேருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் போது வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் அழகுகண்ணன், ராஜகலா, கவுதீஸ் புனிதா மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜ ஜோஸ்வின், திருமலைவாசன், பிரபு, அசோக்குமார், அறிவுச்செல்வி ஆகியோர் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் , இயற்கை இடுபொருள் தயாரிப்பது , தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் , இயற்கை காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வது, தொழில் நுட்ப மூலமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

மேலும் இயற்கை பூச்சி நோய்களை எவ்வாறு கையாள்வது, இயற்கை மேலாண்மை மண் பரிசோதனை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுத்துதல் , பண்ணை கால்நடை பராமரிப்பு , பஞ்சகவி தயாரித்தல், பயோதிகம்போஸ்டர் தயாரித்தல், தென்னங்கன்றுகள் தேர்வு செய்தல், அதனை எவ்வாறு நடவு செய்தல் நோய்களில் இருந்து எப்படி காப்பாற்றுவது, பராமரித்தல் குறித்து செயல் விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் அங்கக பண்ணைகள் குறித்து தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், காளிராஜ் ,உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துராஜ், முத்துமாரி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், ரத்தினம்பால், ஜெயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News