உள்ளூர் செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

திருச்செங்கோடு அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-07-09 10:01 GMT   |   Update On 2022-07-09 10:01 GMT
  • சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.
  • அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையபுரம் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பஸ்வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1½ கிமீ நடந்து வரவேண்டிய நிலையில் இருந்தனர்.

பள்ளி மாணவர்கள் முதியவர்கள் என பலரும் இதனால் சிரமபட்டனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரித்த போது சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய் தறையினர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வேயர் ஆகியோரை கொண்டு நில அளவை செய்து ஆக்கரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப் பாளர்களிடம் எதிர்ப்பு வந்தால் போலீசார் துணையுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லியிருந்தார்.

அதன்படி இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 50 போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், கிராமநிர்வாக அலுவலர் அருண் சர்வேயர் கண்ணன், ஊராட்சித்தலைவர் பிரதிபா ரமேஷ், துணைத்தலைவர் அமுதா கண்ணன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பொதுமக்கள் நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News