உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் ஆம்புலன்ஸ் வேன் உடைப்பு

Published On 2022-08-22 09:47 GMT   |   Update On 2022-08-22 09:47 GMT
  • சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
  • தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் ரோஷணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். கார் ஓட்டுநரான இவர், திண்டிவனம் 5-வது வார்டு கிளை அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கும், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர், அவரது சகோதரர் வேலவனுக்கும், கடந்த 10ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சங்கர், வேலவன், அவரது கூட்டாளிகள் ஆன பிரபா, அஜித், வேலு மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள், சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர். வெளியே சென்ற சதீசை அந்த கும்பல், கான்கிரீட் கல் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில்அவருக்கு தலை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை சதீஷின், உறவினர்கள் அவரை, மீட்டு, ஆட்டோவில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றது. அதில், சதீஷ் ஏற்றி வருவதாக கருதிய, அந்த கும்பல், மருத்துவமனை வாசலில், ஆம்புலன்சை மடக்கி, கையில் வைத்திருந்த ஆயுதத்தால், முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் விநாயகமுருகன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சரண்ராஜ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அதை தடுக்க சென்ற மகாலட்சுமி, என்பவரையும் தாக்கி விட்டு, அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில், மகாலட்சுமிக்கும், தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சதீஷிக்கு, தலையில் 13 தையல், வலது கண் புருவத்தில்3 தையலும் போடப்பட்டது. அங்கிருந்து சதீஷ் மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News