உள்ளூர் செய்திகள்

சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2022-09-02 08:31 GMT   |   Update On 2022-09-02 08:31 GMT
  • சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
  • மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.

சோழவந்தான்

சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி பூசாரி சேகர் தலைமையில் மூலவருக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. சந்தனகாப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவேடகம் மேற்கு பகுதியில் பழமை வாய்ந்த சதுர்வேத மஹாகணபதி கோவிலில் உள்ள மூலவருக்கு அர்ச்சகர் கணேசன் தலைமையில் அபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News