உள்ளூர் செய்திகள்

மயிலாடி உழவர் சந்தையில் காய்கறி பரப்பு விரிவாக்க விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-05 06:46 GMT   |   Update On 2022-07-05 06:46 GMT
  • தோட்டக் கலைத்துறை மூலம் உழவர் சந்தையில் காய்கறி வரத்தினை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம்
  • காய்கறி விதைகள், அலங்கார செடிகள், பூந்தொட்டிகள், உயிர் உரங்கள், சாக்லேட் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி :

தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இணைந்து அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட மயிலாடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்காக்கான விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். வேளாண் துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் உழவர் சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் வரத்தினை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் தோட்டக் கலை அலுவலர் ஷிமாஞ்சனா, வேளாண்மை அலுவலர் கோமதி, கவுசிகா, உதவி அலுவலர்கள் ரமேஷ், ஜெகதீஷ், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தர்மராஜ், நளினி, சிந்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தோட்டக் கலைத்துறை மூலம் உழவர் சந்தையில் காய்கறி வரத்தினை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டமான பயிர் ஊக்க தொகை திட்டங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தோட்டக் கலைத்துறைக்கு என்று தனி அங்காடி ஒதுக்கப்பட்டு காய்கறி விதைகள், அலங்கார செடிகள், பூந்தொட்டிகள், உயிர் உரங்கள், சாக்லேட் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட்டது.

புதிய உழவர் அடை யாள அட்டையை விவ சாயிகள் பெறுவ தற்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் காய்கறி விதை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. உழவர் சந்தையை சுற்றி உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இணைந்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு காய்கறி பரப்பு விரிவாக்கம் செய்ய வழிவகை ஏற்படுத்தின.

Tags:    

Similar News