தமிழ்நாடு

கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

அகோர வீரபத்திர கோவிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

Published On 2024-05-25 08:34 GMT   |   Update On 2024-05-25 08:34 GMT
  • அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
  • பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் அகோர வீரபத்திரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. குரும்பர் இன மக்கள் சார்பில் நடந்த இந்த விழாவில் கோவில் முன்பு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த ஏதுவாக வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தலையில் தேங்காய் உடைக்கும்போதும், சாட்டையடி வாங்கும்போதும் ஒரு பக்தருக்கு கூட ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News