உள்ளூர் செய்திகள்

வேட்டைக்காரர்களுக்கு தப்பி ஊருக்குள் வந்த மானை கொன்ற நாய்கள்

Published On 2022-12-21 09:40 GMT   |   Update On 2022-12-21 09:40 GMT
  • மான்கள் வேட்டை நாய்களால் கடித்து இறக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
  • வேட்டைக்காரர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து வேட்டையாட முயலும்போது அதிலிருந்து தப்பவே மான்கள் ஊருக்குள் வருகின்றன.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் வனப்பகுதியில் நிறைந் தது இந்த வனப் பகுதி களில் மான், காட்டெ ருமை, முயல், பன்றி, யானை, காட்டு ஆடுகள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர்.

மொரப்பூர்வன சரகத்திற்கு உட்பட்டபொம்மிடி அருகே உள்ள பூதநத்தம் காப்பு காட்டுப்பகுதி, பள்ளிப்பட்டி நாகார்ஜுனா மலை ,கவரிமலை போன்ற பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவை இரை தேடி வரும் போது ஊர்களில் உள்ள வேட்டை நாய்களால் வேட்டையாடு பட்டு இறந்து போகும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

பொம்மிடி அருகே உள்ள பி. பள்ளிப்பட்டி லூர்துபுரம் குடியிருப்பு பகுதிகளுக்கு இன்று காலை ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வந்தது. அவற்றை வேட்டை நாய்கள் கூட்ட மாக விரட்டி கடித்த தால் அங்கேயே இறந்து போனது.

இது குறித்து பொது மக்கள் வனத் துறை யினருக்கு தகவல் தெரி வித்தனர். இதன் பேரில் மொரப்பூர் வனத் துறை யினர் இறந்து போன மானை நீட்டு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்ற னர்.

சமீ பத்தில் சில வாரங் களுக்கு முன்பு இதே பகுதியில் புள்ளி மான் நாய்களால் வேட்டையாடப்பட்டு இறந்தது. தொடர்ந்து பொம்மிடி பகுதியில் வனவிலங்குகள் குறிப்பாக மான்கள் வேட்டை நாய்களால் கடித்து இறக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இப்பகுதியிலுள்ள வேட்டைக்காரர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து வேட்டையாட முயலும்போது அதிலிருந்து தப்பவே மான்கள் ஊருக்குள் வருகின்றன.

இங்கு வந்து நாய்களுக்கு இரையாகின்றன.எனவே வேட்டைக்கார்களின் அட்டூழியத்துக்கு வனத்துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

Tags:    

Similar News