உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பிஸ்கட் கடைக்கு 'சீல்'

Published On 2022-10-09 09:46 GMT   |   Update On 2022-10-09 09:46 GMT
  • பவானி பஸ் நிலையத்தில் பிஸ்கட் கடையில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
  • வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

பவானி:

பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிஸ்கட், கூல்ட்ரி ங்க்ஸ் கடைகளில் ஹான்ஸ், பான்பராக், கூல்லிப் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையி லை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டு ள்ளனர்.

இந்த சோதனையில் பவானி பஸ் நிலையத்தில் 8 நம்பர் கூல்டிரிங்ஸ், பிஸ்கட் கடையில் முருகேசன் என்பவர் பாக்கெட்டில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இந்த கடைக்கு சீல் வைக்க கோரி பவானி வருவாய் துறைக்கு பவானி போலீசார் கடிதம் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுபடி வருவாய் துறை ஆய்வாளர் விஜய கோகுல், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News