உள்ளூர் செய்திகள்

அழிக்கப்பட்ட சாராய ஊறல்.

தருமபுரி, கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் கைது

Published On 2022-09-20 09:32 GMT   |   Update On 2022-09-20 09:32 GMT
  • கடத்துாரன் கொட்டாய் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி வருவதாக, தருமபுரி கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த ராஜா (வயது 50)என்பவரை பிடித்து விசாரித்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நூல அள்ளி அடுத்த கடத்துாரன் கொட்டாய் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி வருவதாக, தருமபுரி கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து கலால் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், எஸ்.ஐ., விஜயசங்கர் தலைமையில் கலால் போலீசார் கடத்துாரன்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த ராஜா (வயது 50)என்பவரை பிடித்து விசாரித்தனர்.இதில், ராஜா தனது தேக்கு தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவின் தோப்பில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் ஊறல் மற்றும் 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், கள்ளச்சாரயம் காய்ச்சிய ராஜாவை கைது செய்தனர்.

இதேபோல கிருஷ்ண கிரி மாவட்டம் சிங்கா ரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிப்பட்டி கிராம பகுதி தென்பெண்ணை ஆற்று கறையோரம் உள்ள காட்டுப்பகுதியிகளில் மர்ம நபர்கள் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமலா அட்வின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு எஸ்.ஐ. மற்றும் குற்றபிரிவு காவலர்கள் பிரபாகரன், அதியமான், நாசில் ஆகியோர் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகர், தென்பெண்ணை ஆற்றங்கரையில் 4 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களை கண்டுபிடித்து பேரல்களில் இருந்து கொட்டி அழித்தனர்.

அந்த பகுதியில் ஊறல் வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து சிங்காரபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கிராம பகுதியில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News