உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரம்

Published On 2023-10-10 09:27 GMT   |   Update On 2023-10-10 09:27 GMT
  • டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
  • தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள‌ ஆய்வு செய்தார்.

வடவள்ளி,

தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தொண்டாமுத்தூர் அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள், டயர்கள், போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பதை கண்டுபிடித்து உடனடியாக அதை அப்புறப்படுத்தி மருந்து தெளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-வது வார்டு குபேரபுரி பகுதியில் ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள ஆய்வு செய்தார். 

Tags:    

Similar News