உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்கவிழா: திசையன்விளையில் 17-ந்தேதி பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள்- மாவட்ட செயலாளர் அறிக்கை

Published On 2022-10-14 09:37 GMT   |   Update On 2022-10-14 09:37 GMT
  • அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
  • மாலை 6 மணிக்கு திசையன்விளையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.கவின் பொன் விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், அதன் முன்பு அலங்கரித்து வைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திசையன்விளையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் தலைமை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு அவரவர் பகுதிகளில் கொடி ஏற்றியும், உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News