உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 87,963 பேருக்கு தடுப்பூசி

Published On 2022-08-08 06:58 GMT   |   Update On 2022-08-08 06:58 GMT
  • சேலம் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
  • ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

இந்த முகாமில் சேலம் மாநகராட்சி பகுதியில் 9 ஆயிரத்து 894 பேருக்கும், சேலம் புறநகர் பகுதியில் 60 ஆயிரத்து 980 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 17 ஆயிரத்து 963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியைக் கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 15,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுவரை 8,19,784 பேருக்கு முதல் தவணையும், 12,81,701 பேருக்கு இரண்டாம் தவணையும், 56,514 பேருக்கு முன்னெச்சரிக்கைபூஸ்டர் டோஸ் தடுப்பூசிஎன மொத்தம்21,57,999 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News