உள்ளூர் செய்திகள்

சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

Published On 2023-10-05 06:58 GMT   |   Update On 2023-10-05 06:58 GMT
  • இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
  • சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.

இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.

சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News