உள்ளூர் செய்திகள்
மதுரை பாண்டி பஜார் பகுதியில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Published On 2022-05-26 11:46 GMT   |   Update On 2022-05-26 11:46 GMT
மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த மோதலில் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை

மதுரை ெரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதி யில் உள்ள கோட்ட மேலா ளர் அலுவலகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த வாரம் ஊழியர் ஒருவருக்கு பணி இடமாற்றம் தொடர் பாக, சங்க நிர்வாகிகள் சிலர் மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்தித்தனர். இதற்கு மற்றொரு தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இருதரப்பும் மோதிக் கொண்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படு த்தியது. இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் சார்பில் இருதரப்பு இடையே விசாரணை நடத்தியது. இதில் தகராறில் ஈடுபட்ட தாக, தொழிற்சங்கத்தை சேர்ந்த 4 ெரயில்வே ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் எதிர்தரப்பு தொழிற்சங்கம் சார்பில் மோதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகேந்திரன் என்பவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். 

இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் விசாரணை நடத்தி முகமது ரபிக், சபரி வாசன், செந்தில், ஜூலியன், சீதாராமன், ஜோதி ராஜா, சோலை பாரதி, ஜெயராமன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதேபோல இன்னொரு தரப்பைச் சேர்ந்த கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டதாக, 13 ஊழியர்கள் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ‘மதுரை ெரயில்வே கோட்ட அலுவலகத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும், அங்கு மோதலில் ஈடுபட்ட மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க நிர்வாகிகள், மதுரை பாண்டி பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News