உள்ளூர் செய்திகள்
சூலூர் தாலுகாவில் இன்று நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் பங்கேற்று மனுக்களை பெற்ற காட்சி.

கோவை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி

Published On 2022-05-26 10:09 GMT   |   Update On 2022-05-26 10:09 GMT
சூலூரில் கலெக்டர் சமீரன் மக்களிடம் மனுக்கள் பெற்றார்
வடவள்ளி:

கோவை மாவட்டத்தில் ஜமாபந்தி, அந்தந்த தாலுகா அலுவலகங்களில்  இன்று தொடங்கியது. சூலுாரில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று நடந்தது. 
 
அவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த ஜமாபந்தி ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோல அன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை–யிலும், பொள்ளாச்சி, வால்பா–றையில் சப்-கலெக்டர் தலைமையிலும் நடந்தது.

கிணத்துக்கடவில் கலால் துணை  கமிஷனர் தலைமை–யிலும் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் வடக்கு ஆர்.டி.ஓ., தலைமை–யிலும் நடைபெற்றது.
 
பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தெற்கு கோட்டாட்சியர் இளங்கோ தலைமை தாங்கினார். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ஆலந்துறை, இக்கரை போலுவம்பட்டி, செம்மேடு, மத்தவராயபுரம், பூலுவபட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.

அவர்கள் தங்கள் குறைகள் மற்றும் தங்களுக்கு தேவையான அடிப்பை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, தெற்கு கோட்டாட்சியர் இளங்கோவிடம் வழங்கினர்.நாளை தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம் பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
 
மதுக்கரையில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், வடக்கு தாலுகாவில் சமூக பாது காப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும், கோவை தெற்கில் ஆதி திராவிடர்நலஅலுவலர் தலைமையிலும், ஆனைமலையில் தாட்கோ மேலாளர் தலைமையிலும் ஜமாபந்தி நடந்தது.இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத் தல், முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

Tags:    

Similar News