உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட நாகராஜ்.

அவிநாசி அருகே வீட்டை எனது பெயரில் எழுதி தராததால் தந்தையை அடித்துக் கொன்றேன் - கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-05-18 07:02 GMT   |   Update On 2022-05-18 07:02 GMT
பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நான் அவரை கட்டையால் அடித்து கொலை செய்தேன்.
அவிநாசி:

அவிநாசி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். அவிநாசி அருகே எம்.நாதம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (எ) கருப்பசாமி (55). கூலித்தொழிலாளி. குடும்பத்தை பிரிந்த இவர் மூத்தமகன் நாகராஜூடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது கருப்பசாமி செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அவரது மகனை தேடி வந்தனர். இந்நிலையில் நாகராஜன்போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது தந்தையை அடித்துக்கொன்று செப்டிக்டேங்கில் வீசியதை ஒப்புக்கொண்டார். 

மேலும் போலீசாரிடம் நாகராஜ் வாக்குமூலமாக கூறியதாவது:-

எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடியிருக்கும் வீட்டை எனது பெயருக்கு எழுதி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து வந்தார். இது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. 

சம்பவத்தன்று இரவு இந்த பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நான் அவரை கட்டையால் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மறைத்து விட்டு வீட்டில் இருந்து தப்பி விட்டேன் என்றார். இதையடுத்து அவிநாசி போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News