உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் லாரி மோதி விபத்து

Update: 2022-05-17 06:50 GMT
காம்பவுண்டு சுவரை ஒட்டி நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது
உடுமலை:

உடுமலை பழனி ரோட்டில் உள்ள ஜி.வி.ஜி மகளிர் கல்லூரி உள்ளது. அதன் காம்பவுண்ட் சுவற்றில் பழனியிலிருந்து அதிகாலை பொள்ளாச்சி நோக்கி வந்த கனரக லாரி ஒன்று பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது. 

கல்லூரி அருகே வந்த போது இடது புறமாக உள்ள காம்பவுண்ட் சுவற்றுப் பகுதியில் மோதி காம்பவுண்ட் மேற்பகுதியை இடித்து கவிழ்ந்து விழுந்தது. இதனால் காம்பவுண்டில் மேல் பகுதி இடிந்து விழுந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காம்பவுண்டு சுவரை ஒட்டி நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News