உள்ளூர் செய்திகள்
விபத்து

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி மகன் கண் எதிரே தந்தை பலி

Published On 2022-05-16 10:55 GMT   |   Update On 2022-05-16 10:55 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதிய விபத்தில் மகன் கண் எதிரே தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:

திண்டிவனம் உப்புவேலூர் அருகே உள்ள அறுவடை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 41) விவசாயி. இவரது மகன் பத்ம விஸ்வநாதன் (10) இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று வடநெற்குணம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர்.

மோட்டார் சைக்கிள் பிரம்மதேசம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கருணாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மகன் பத்ம விசுவநாதன் பலத்த காயமடைந்தார்.

இது பற்றி அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருணாகரன் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பத்ம விஸ்வநாதனை சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே தந்தை மகன் மீது மோதிய லாரி சேலம்-ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (21) இவர் நேற்று இரவு கல் குவாரியில் வேலை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி போது மோதியது. இதில் சந்துரு காயம் அடைந்தார். அவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News