உள்ளூர் செய்திகள்
தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.

எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வில் 18 மாணவர்கள் தேர்வு

Published On 2022-05-14 09:43 GMT   |   Update On 2022-05-14 09:43 GMT
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத்தேர்வில் 18 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல முன்னனி நிறுவனங்கள் மூலம் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறது.  

அதுபோல் தற்போது சென்னையிலுள்ள ஜிஸ்பேஸியல் டெக்னாலஜி கம்பெனி இறுதியாண்டு சிவில் துறை மாணவர்கள் சுமார் 24 பேருக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

இதனை சென்னை, ஜிஸ்பேஸியல் டெக்னாலஜி கம்பெனி மனிதவளத்துறை அலுவலர் முருகன் நடத்தினார். வேலை வாய்ப்பு முகாமிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். கல்லூரி சிவில் துறைத்தலைவர் கணேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வளாகத் தேர்வு ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன்சுவிதா மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News