உள்ளூர் செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலை ஆய்வு செய்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சை பெரிய கோவிலில் 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு எம்.பி. உத்தரவு

Published On 2022-05-10 10:19 GMT   |   Update On 2022-05-10 10:21 GMT
தஞ்சை பெரிய கோவிலில் 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர். இங்கு அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிவறைகள், சிற்றுண்டிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் சுத்தமா கவும் சுகாதாரமா கவும் இருக்க வேண்டும்.  சுற்றுலா பயணிகள், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்கு எந்த வகையிலும் எந்த பாதிப்பும் நடக்காத வண்ணம் போலீசார்பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பெரியகோவிலை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். பெரிய கோவில் உள்ளேயும், வெளியேயும் தடுப்பு அரண் அமைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வின் போது தொல்லியல் துறை பராமரிப்பு உதவி இயக்குனர்சங்கர், மாநகராட்சி 
ஆணையர்சரவணகுமார், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News