உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசிய காட்சி.

தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி 10 நாட்கள் கண்காட்சி

Update: 2022-05-07 08:19 GMT
தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி 10 நாட்கள் கண்காட்சி
நாகர்கோவில், மே.7-

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய் வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைைமயில் நேற்று நடைபெற்றது. 

வருவாய்த்துறை பொதுப் பணித்துறை (கட்டிடம், நீர் வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி கள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன் வளத்துறை, போக்குவரத் துத்துறை, காவல்துறை, 

கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் அரவிந்த் கேட்டறிந்தார்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டிடம், கடலரிப்பு தடுப் புக்கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இப்பணிகள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 10 நாட்கள் நடத்துவது குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் அரவிந்த் கலந்தா லோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், பத்மநாப புரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர்கள் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ (மகளிர் திட்டம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உள்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News