உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் 28 பவுன் தங்க நகைகளுடன் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Update: 2022-05-06 09:35 GMT
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் மாயமான சபானா யாஸ்மினை தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் விஷாலினி (வயது 19). 
 
இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று விஷாலினியை அவரது தந்தை கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ரவிச்சந்திரனின் செல்போனுக்கு அவரது மகளிடம்  ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நான் நாளை வருகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என இருந்தது.
 
 அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக ரவிச்சந்திரன் கல்லூரிக்கு சென்று விசாரித்தார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது விஷாலினி வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு வீட்டில் இருந்த அவரது படிப்பு சான்றிதழ்கள்,  15 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
 
புகாரின் பேரில் பணம் மற்றும் நகையுடன் மாயமான கல்லூரி மாணவி விஷாலினியை தேடி வருகிறார்கள். 

சுந்தராபுரம் அருகே உள்ள காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவரது மகள் சபானா யாஸ்மின் (27). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் 13 பவுன் தங்க நகைகளுடன் மாயமாகி விட்டார். இது குறித்து அவரது சகோதரர் முகமது ஆசிப் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன்  மாயமான சபானா யாஸ்மினை தேடி வருகிறார்கள்.  

Tags:    

Similar News