உள்ளூர் செய்திகள்
முகாமில் மேயர் ராமச்சந்திரன் தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சி

28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-04-30 10:23 GMT   |   Update On 2022-04-30 10:23 GMT
சேலம் மாவட்டத்தில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 91.3 சதவீதம் பேரும்,  2-ம் தவணை தடுப்பூசியினை 70.9 சதவீதம் பேரும் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியினை 7.4 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.
 
மாவட்டத்தில் இது வரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற இன்று நடந்தது. 

இதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,  வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,392 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 15,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 200 மையங்களில் நடைபெற்றது.   16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையம், மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்கள் 1,30,294 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 

அவர்களில்  2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியிருந்தும் தடுப்பூசி போடாத வர்கள் 94,714 பேர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்க ளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News