உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேணடும் - வரி செலுத்துவோா் சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-04-26 07:30 GMT   |   Update On 2022-04-26 07:30 GMT
தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தியுள்ளது.
தாராபுரம்:

தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணனிடம், வரி செலுத்துவோா் சங்கத்தின் தலைவா் பழனிசாமி, செயலாளா் வெள்ளைசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தியுள்ளது. இதன்படி நகராட்சி, பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவுக்கு குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 610 முதல் 1200 சதுர அடி வரையில் உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரையில் உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரியை உயா்த்தி அறிவித்துள்ளது.

மேலும் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை கல்வி நிறுவன கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயா்த்தப்பட உள்ளது. எனினும் வரி உயா்வு மக்களை அதிகம் பாதிக்காத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 24. பகுதிகளாக பிரித்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொழில் துறையும், வணிகத்துறையும் மிகவும் பின் தங்கியுள்ளதுடன், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதியாகும். ஆகவே உயா்த்தப்பட்ட வரியை குறைத்து ஒரே சீரான வரி நிா்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News