உள்ளூர் செய்திகள்
.

தேங்காய் வரத்து அதிகரிப்பு

Update: 2022-04-25 11:29 GMT
சேலம் மார்க்கெட்டுகளுக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:

அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக தேங்காய் இடம் பிடித்துள்ளது. தின்பண்டங்கள், எண்ணெய் தயாரிப்பிலும் தேங்காய் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

சேலம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம்,  சத்திய-மங்கலம், கவுந்தப்பாடி, கோவை, பெருந்துறை  மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு,  மாண்டியா, சாம்ராஜ் நகர்  ஆகிய  பகுதிகளில்  இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  தற்போது அனைத்து பகுதிகளிலும்   தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில்   வருகிற வைகாசி மாதம்  அடுத்தடுத்து  தொடர் முகூர்த்த தினங்கள் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விசேஷ தினங்கள் வருவதால் தேவைகள் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.  

கடைவீதி, ஆற்றோரம் தெரு , ஆனந்தா மார்க்கெட்,  பால் மார்க்கெட் பகுதிகளில் சிறிய அளவு தேங்காய்  ரூ.10, நடுத்தர அளவு தேங்காய் ரூ‌.14  - 18 , பெரிய அளவு தேங்காய்  ரூ. 22-  26 என விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Tags:    

Similar News