உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜே.சி.பி. உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

Published On 2022-04-25 10:15 GMT   |   Update On 2022-04-25 10:15 GMT
புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் வரி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.
திருப்பூர்:

டீசல் விலை உயர்வை தொடர்ந்து வாடகை கட்டணம் உயர்த்தப்படுவதாக, கோவை, திருப்பூர் மாவட்ட ஜே.சி.பி., உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஜே.சி.பி., உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கனகராஜ் கூறியதாவது:&

புதிய ஜே.சி.பி. எந்திர வாகனங்களின் விலை ஏற்றம், டீசல் பெட்ரோல், ஆயில் விலை உயர்வு, உதிரி பாகங்கள், அத்தியாவசிய பொருட்கள், இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களின் வாடகை கட்டணத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாக, இதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாளை முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி பகுதிகளில் ஜே.சி.பி. எந்திர வாகனங்களை நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தப்படும்.

 டீசல் விலை உயர்வு, புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் வரி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும். இவ்வாறு கனகராஜ் கூறினார்.
Tags:    

Similar News