உள்ளூர் செய்திகள்
.

ஆன்லைன் மூலம் ஓ.டி.பி. தகவல்களை பெற்று காண்டிராக்டரின் வங்கி கணக்கில் ரூ.1.36 லட்சம் அபேஸ்

Published On 2022-04-21 10:13 GMT   |   Update On 2022-04-21 10:13 GMT
ஆன்லைன் மூலம் ஓ.டி.பி. தகவல்களை பெற்று காண்டிராக்டரின் வங்கி கணக்கில் ரூ.1.36 லட்சம் அபேஸ் சேலம் சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.
சேலம்:

சேலம் பெரமனூரைச் சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன், பில்டிங் கான்டி-ராக்டர். கடந்த 7&ந்தேதி இவரது செல்போனில் பேசிய இளம்பெண் சேமிப்பு வங்கி கணக்கிற்கான கே.ஒய்.சி. புதுப்பிக்காததால் சிறிது நேரத்தில் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும், அதனால் தான் வங்கி கணக்கினை புதுப்பித்து தருவதாக கூறினார்.

இதை நம்பி அவர் தனது வங்கி விபரங்கள் மற்றும் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண் போன்றவற்றை கூறினார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.36 லட்சம் அபேஸ் ஆனது. இதுபற்றி அனந்தகிருஷ்ணன் சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சந்தோஷ்-குமார் வழக்குப்பதிவு செய்து முறைகேடாக நடைபெற்ற பணப் பரிமாற்றத்தை ஆராய்ந்ததில் அந்த பணம் சூரத்தில் உள்ள இண்டுஸ்லாண்ட் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய-வந்தது.

மோசடி செய்யப்பட்ட பணம் மனுதாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு எச்.டி.எப்.சி. மற்றும் இண்டுஸ்லாண்ட் ஆகிய வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தனர். 

இதைதொடர்ந்து மனுதாரரிடமிருந்து மோசடி-யாக பரிமாற்றம் செய்யப்-பட்ட தொகை ரூ. 1.36 லட்சம் முழுவதும் அனந்தகிருஷ்-ணனின் வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. மேலும் மோசடி நபரின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது போன்று வங்கியிலிருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், செல்போன்களுக்கு அனுப்-பப்படும் குறுஞ்செய்தி-களையோ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பியோ ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930&-ஐ விரைவாக தொடர்பு கொள்ளும்-பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத்தர இயலும் என சேலம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளிதரன்  தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News