உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- கலெக்டர் கடும் எச்சரிக்கை

Published On 2022-04-19 10:17 GMT   |   Update On 2022-04-19 10:17 GMT
வேலூரில் விபத்து ஏற்படுத்தும் வகையில் விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்து டிரைவர் லைசென்சு ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாகனங்கள் சாலை விதிகளை மீறி செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு உயரிழப்பும் காயங்களும் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை-கள் எடுக்கப்படுகிறது. 

வேலூர் மாவட்டத்தில் பெருவாரியான வாகன விபத்துக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ்சில் தொற்றிச்செல்வதாலும், இருச்சக்கர வாகனம் ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் விதிகளை மீறி இயக்கப்படு-வதால் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் விதமாக போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே அமலில் உள்ள போக்குவரத்து விதிகள் பொதுமக்களின் கவனத்-திற்கு கொண்டு வரப்படுகின்றன.

இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்-காமலும், அதிவேகமாக ஓட்டிச்செல்வது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக இருசக்கர வாகனங்களில் அமர்ந்து செல்வது, சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது போன்ற நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மட்டுமின்றி எதிரில்பக்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் சமயங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. 

விதிமுறைகளை மீறி ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் போலீசார் மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்-கள் மீது சம்பந்தப்பட்ட வாகனத்தினை பறிமுதல் செய்வதோடு அல்லாமல் வாகன ஓட்டியின் லைசென்ஸ் ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாநகரில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும்.

டிரைவர் இருக்கையில் டிரைவரை தவிர இதர நபர்களை அமரவைத்து ஆட்டோக்கள் இயக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட வாகனத்தினை பறிமுதல் செய்வதோடு இல்லாமல் வாகன ஓட்டியின் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பஸ் புறப்பட்டபின் ஓடிச்சென்று ஏறுவது, படிக்கட்டுகளில் தொற்றிக்கொண்டு பயணம் செய்வது ஆகியன போக்குவரத்து விதிகளுக்கு புறம்பானதாகும்.

இதனை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், இதனை மாணவர்கள் செய்யாதிருக்க பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி விபத்தில்லாத மாவட்டமாக அமைய ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News