உள்ளூர் செய்திகள்
.

திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

Published On 2022-04-12 09:27 GMT   |   Update On 2022-04-12 09:27 GMT
சேலம் அழகாபுரத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடைபெற்றது.
சேலம்: 

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்கினி திருவிழா நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடைபெற்றது. 

காலை 10 மணிக்கு சாமி ஊர்வலம், தொடர்ந்து அர்ச்சுணன் தபசு போதல், அரவான் கடபலி உள்ளிட்டவை நடந்தது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மாமாங்கத்தில் இருந்து புறப்பட்ட சாமி ஊர்வலம் கோவிலுக்கு வந்ததடைந்தது. 

இதற்காக வழிநெடுகிலும் பூக்கள் தூவப்பட்டிருந்தன. தொடர்ந்து தலைமை பூசாரி தீ மிதித்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் ஏராளமானவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

சில ஆண்கள் தோள்களில் குழந்தைகளை சுமந்து கொண்டு தீ மிதித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், சாமி ஊர்வலமும் நடைபெற்றது.
Tags:    

Similar News